நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட செய்தி.. சபையில் உரையை ஆரம்பித்தார் அநுர
புதிய இணைப்பு
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சபைக்கு வருகை தந்துள்ளார்.
இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி தரப்பில் இருந்து இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார சபையில் தனது உரையை தற்போது ஆரம்பித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
இலங்கை மீது அமெரிக்கா விதித்த 20வீத தடைகள் இன்று முதல் நடைமுநைக்கு வரும் என்று நிதியமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க வரிகளைக் குறைப்பது குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று விசேட அறிக்கை வெளியிட உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
ட்ரம்பின் அறிவிப்பு
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நாடாளுமன்ற ஒத்திவைப்பு விவாதத்தின் போது ஜனாதிபதி இந்த அறிக்கையை வெளியிடுவார் என்று கூறப்படுகின்றது.

இந்த ஒத்திவைப்பு விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கை மீது 44 வீதம் பின்னர் 30 வீதம் என பரஸ்பர விதிகளை அறிவித்தார்.
பின்னர், 90 நாட்கள் கால அவகாசம் அளித்து பேச்சுவார்த்தைகளுக்கு இணங்க முடியும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கமைய அமெரிக்காவுடன் இலங்கை நிதிக்குழு மேற்கொண்ட பேச்சுவாரத்தைகளின் பின்னர் வரி 20 வீதமாக குறைக்கப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri