ஜப்பான் - தென்கொரியாவுக்கான வரி விகிதம் தொடர்பில் ட்ரம்பின் அறிவிப்பு
ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 வீத வரி விதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மலேசியா, கஜகஸ்தான், தென்னாப்பிரிக்கா, லாவோஸ் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்கும் புதிய வரி விகிதங்களை அமெரிக்கா விதித்துள்ளது.
விடுக்கப்பட்ட எச்சரிக்கை
ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வரிகள் குறித்த அறிவிப்பை ட்ரம்ப், பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அனுப்பிய கடிதங்களை Truth Social இல் பதிவேற்றியுள்ளார்.
அந்தக் கடிதங்களில், தங்கள் சொந்த இறக்குமதி வரிகளை அதிகரிப்பதன் மூலம் பழிவாங்க வேண்டாம் என்றும், இல்லையெனில் ட்ரம்ப் நிர்வாகம் வரிகளை மேலும் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
"எந்த காரணத்திற்காகவும் உங்கள் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்தால், நீங்கள் எவ்வளவு எண்ணிக்கையில் உயர்த்தினாலும், அது நாங்கள் வசூலிக்கும் 25வீதத்தில் சேர்க்கப்படும்" என்று ட்ரம்ப் ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா மற்றும் தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங்கிற்கு எழுதிய கடிதங்களில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |