அடுத்த வாரமே ஈரானுடன் முக்கிய ஒப்பந்தம்.. ட்ரம்ப் வெளியிட்ட தகவல்!
புதிய இணைப்பு
ஈரானிய தலைவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அது அடுத்த வாரமே நிகழும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.
தற்போது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ட்ரம்ப், செய்தியாளர்களிடம் இதனை குறிப்பிட்டார்.
அதேவேளை, ஈரானை மீண்டும் தாக்கும் நோக்கம் அமெரிக்காவுக்கு உள்ளதா என வினவிய போது, அப்படி ஒன்று நடக்காமல் இருப்பதையே நாங்கள் விரும்புகின்றோம் என அவர் கூறினார்.
முதலாம் இணைப்பு
ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பிறகு, எதிர்வரும் திங்கட்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இருவரும் சந்திக்கவுள்ளனர்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான 12-நாள் போருக்குப் பிறகு, காசா மோதல் விரைவில் முடிவடைவதைக் காண விரும்புவதாக ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.
ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு இடையேயான இந்த சந்திப்பு இஸ்ரேல் மற்றும் ஹமாஸால் விவாதிக்கப்படும் அமெரிக்க போர்நிறுத்த முன்மொழிவுக்கு புதிய அவசரத்தை அளிக்கக்கூடும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் ஒத்துழைப்பு
ஆனால், அது போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு ஒப்பந்தத்திற்கு வழிவகுக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை எனவும் அவை சுட்டிக்காட்டுகின்றன.
மேலும், ஞாயிற்றுக்கிழமை வாஷிங்டனுக்குப் புறப்படுவதற்கு முன், நெதன்யாகு அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை தமது பகிரப்பட்ட எதிரிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியைக் கொண்டு வந்ததற்காக அமெரிக்காவால் பாராட்டப்பட்டது.
அதேவேளை, இஸ்ரேல் - ஈரான் போர்நிறுத்தத்திற்கு பின்னரான இருவரின் குறித்த சந்திப்பு, காசா போர்நிறுத்தத்திற்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |