மூன்று வாரங்களில் மட்டும் 1,600 நில நடுக்கங்கள்..! ஜப்பானில் கொடூரம்
தெற்கு ஜப்பானில் உள்ள தீவுகளில் கடந்த 3 வாரங்களில் மட்டும் 1,600 நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் பலர் அந்நாட்டு அரசாங்கத்தால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
எனினும், குறித்த தீவுகளில் பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
குழப்பத்தில் நிபுணர்கள்
ஆனால், இடைவிடாத அதிர்வுகள் அந்தப் பகுதி மக்களுக்கு கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் பலர் தங்களது தூக்கத்தையே இழந்துள்ளனர்.
நீருக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பும், மாக்மாவின் ஓட்டமும் நில நடுக்கங்களுக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.
எனினும், இந்த நில நடுக்கங்கள் எவ்வளவு காலம் தொடரும் என்பதை கணிக்க முடியாமல் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகில் ஏற்படும் நிலநடுக்கங்களில் சுமார் 18 சதவீதமான நில நடுக்கங்கள் ஜப்பான் தீவுக்கூட்டங்களில் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |