இனிமேல் உதவ அமெரிக்கா இருக்காது! எரிபொருள் விநியோகம் தொடர்பில் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் காரணமாக எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட நாடுகள், தங்களுக்குத் தேவையான எண்ணெய் விநியோகத்தை தாங்களே உறுதி செய்து கொள்ள வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இனிமேல் அமெரிக்கா உதவாது!
இதன் மூலம், நட்பு நாடுகளுக்காக அமெரிக்கா இனி தலையிட்டு உதவி செய்யாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நாடுகள் அமெரிக்காவிடமிருந்து எண்ணெயை வாங்குவதையோ அல்லது எண்ணெய் விநியோகத்தைப் பெறுவதற்கான மாற்று வழிகளைத் தேடுவதையோ பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
அத்துடன், “அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அவர்கள் ஹோர்முஸ் நீரிணை நோக்கிச் சென்று அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இனி உதவ அமெரிக்கா இருக்காது. உங்கள் சொந்த எண்ணெயை நீங்களே பெற்றுக்கொள்ளுங்கள்” என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri