போர்நிறுத்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் ஈரானின் அறிக்கை! பகிர்ந்துள்ள ட்ரம்ப்
அமெரிக்காவுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் அராக்சியின் அறிக்கையை, ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' கணக்கில் பகிர்ந்துள்ளார்.
நாங்கள் முன்னரே தெரிவித்தபடி, "பிராந்தியத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவர அயராது பாடுபட்டதற்காக" பாகிஸ்தானுக்கும் அதன் தலைமைக்கும் தெஹ்ரானின் "நன்றியையும் பாராட்டையும்" அராக்சி தெரிவித்தார்.
ஈரானின் அறிக்கை
"ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், எமது வலிமைமிக்க ஆயுதப் படைகள் தற்காப்பு நடவடிக்கைகளை நிறுத்திவிடும்" என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அந்த அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும், அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஈரானின் இராணுவத்துடன் ஒருங்கிணைந்து ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிப்பது "சாத்தியமாகும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டைவிட்டு வெளியேறுவது குறித்து நிலா சொன்ன பதில், சேரன், சோழன் செய்தது என்ன?... அய்யனார் துணை சீரியல் Cineulagam