புடினின் காதுகளுக்கு இசையான ட்ரம்பின் அறிவிப்பு!
உக்ரைன் - ரஷ்ய மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் போர்நிறுத்தம் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் இந்த அறிவிப்பு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் காதுகளுக்கு இசை போன்றது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் உக்ரைன் போர் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.
போர்நிறுத்தம்
பாதுகாப்பு உத்தரவாதங்கள் உட்பட முக்கியமான விடயங்கள் குறித்து இன்று மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக ஜெலன்ஸ்கி கூறுகின்றார்.
இதேவேளை, உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவதற்கு டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.
எனினும், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸும் போர் நிறுத்தத்தை வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில், மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் போர்நிறுத்தம் அவசியமற்றது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



