கிரீன்லாந்து தொடர்பில் ட்ரம்பின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை : சிக்கலில் உலக நாடுகள்
கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்படுத்துவதை எதிர்க்கும் 8 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருட்களுக்கு பெப்ரவரி மாதம் முதல் புதிய வரிகளை விதிக்க டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி, இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து அல்லது எந்தவொரு பொருட்களுக்கும் 10வீத புதிய வரியை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
25வீதம் ஆக உயர்த்தப்படும்
கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கான செயல்முறைக்கு ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரி நடைமுறையில் இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் ஒரு பதிவில் தெரிவித்தார்.

அதன்படி டென்மார்க், நோர்வே, சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு பொருட்களுக்கும் இந்த 10வீத வரி விதிக்கப்படும் என்று அவர் தனது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரி ஜூன் 1, 2026 முதல் 25வீதம் ஆக உயர்த்தப்படும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்வீட்டில் எச்சரித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |