டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு! அரச தரப்பு கொடுத்த முக்கிய விளக்கம்
அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பில் மேலும் 20 வீதம் குறைக்கப்படும் என்ற தகவல்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வரி விதிப்பு
ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர், நாம் அரசாங்கம் என்ற வகையில் அமெரிக்காவின் வர்த்தக திணைக்களத்துடன் இதற்காக ஒன்றிணைக்கப்பட்டுள்ள நிறுவனங்களுடன் சர்வதேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு தான் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
செனட்டில் எனது நண்பர் இருக்கிறார் என்ற ரீதியில் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியாது.வேறு காரணங்களுக்கு என்றால் அவை சாத்தியப்படலாம்.
ஆனால் எமக்கு வரி தொடர்பில் மேலும் சலுகைகள் கிடைக்கும் சந்தர்ப்பங்கள் உண்டு. இது தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள நாம் தீர்மானித்துள்ளோம்.
அதில் எமது பொருளாதார தன்மை கருத்தில் கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.