ட்ரம்ப் விதித்த உலகளாவிய இறக்குமதி வரிகள் இரத்து: அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அமெரிக்க உயர் நீதிமன்றம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த உலகளாவிய இறக்குமதி வரிகளை (Tariffs) இரத்துசெய்து உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்குப் போட்டியாக புதிய 10 சதவீத வரியை டிரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ட்ரம்ப் நிர்வாகம் சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் பல நாடுகளின் இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதித்திருந்தது.
இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், 6-3 என்ற கணக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், வரி விதிக்கும் அதிகாரம் காங்கிரஸுக்கே (நாடாளுமன்றம்) உள்ளது என்றும், ஜனாதிபதி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்றும் கூறி அந்த வரிகளைச் செல்லாது என அறிவித்ததுள்ளது.
இந்தத் தீர்ப்பினால் பெரும் பின்னடைவைச் சந்தித்த டிரம்ப், தன்னை எதிர்த்துத் தீர்ப்பளித்த நீதிபதிகளை "முட்டாள்கள்" என்றும் "தேசப்பற்றற்றவர்கள்" என்றும் கடுமையாகச் சாடினார்.
பில்லியன் கணக்கான டொலர்கள்
குறிப்பாக, தான் நியமித்த எமி கோனி பாரெட் மற்றும் நீல் கோர்சுச் ஆகிய நீதிபதிகள் தனக்கு எதிராக வாக்களித்தது குறித்து அவர் மிகுந்த அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு பில்லியன் கணக்கான டொலர்களைத் திரும்ப வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தப் பணத்தைத் திரும்பப் பெறுவது எளிதாக இருக்காது என்றும், இதற்காகப் பல ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, 'பிரிவு 122' (Section 122) என்ற இதுவரை பயன்படுத்தப்படாத ஒரு சட்டத்தைப் பயன்படுத்தி, வரும் பெப்ரவரி 24 முதல் புதிய 10 சதவீத உலகளாவிய வரியை டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தச் சட்டத்தின் கீழ் 150 நாட்களுக்கு வரி விதிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது, அதன் பிறகு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படும்.
இந்த வரி விதிப்பில் இருந்து மருந்துகள், சில மின்னணு பொருட்கள் மற்றும் விவசாயப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை உலக வர்த்தகச் சூழலில் மீண்டும் ஒரு நிச்சயமற்ற நிலையை உருவாக்கியுள்ளது.
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam