அமெரிக்காவின் அச்சமூட்டும் சிறையை மீண்டும் திறக்க ட்ரம்ப் திட்டம்: அடைக்கப்படும் கொடூரமான குற்றவாளி
அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் அச்சமூட்டும் சிறைச்சாலையாகக் கருதப்பட்ட 'அல்காட்ராஸ்' (Alcatraz) சிறையை மீண்டும் திறக்க அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
2027ஆம் நிதியாண்டிற்கான தனது பட்ஜெட் முன்மொழிவில், இந்த சிறையை நவீன வசதிகளுடன் கூடிய அதிநவீன பாதுகாப்பு மையமாக மாற்றுவதற்காக 152 மில்லியன் டொலர் (சுமார் 115 மில்லியன் பவுண்டுகள்) நிதியை அவர் கோரியுள்ளார்.
தீவிரமடையும் வான்வழி தாக்குதலினால் நடுவானில் சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள் - அபுதாபியில் பற்றியெரியும் ஆலை
தீவில் அமைந்துள்ள சிறைச்சாலை
சென் பிரான்சிஸ்கோவின் கோல்டன் கேட் பாலத்திற்கு அருகில் ஒரு தீவில் அமைந்துள்ள இந்தச் சிறைச்சாலை, 'தி ரொக்' (The Rock) என்று அழைக்கப்படுகிறது.

1963ஆம் ஆண்டு மூடப்பட்ட பிறகு, இது ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டு ஆண்டுக்கு 60 மில்லியன் டொலர் வருவாயை ஈட்டி வருகிறது.
தற்போது இதனை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்து, அமெரிக்காவின் மிக கொடூரமான குற்றவாளிகளை அங்கு அடைக்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், இந்தத் திட்டத்திற்கு கலிபோர்னியா அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தீவில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதிகள்
தீவில் குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதிகள் இல்லாதது, அனைத்துப் பொருட்களையும் படகு மூலம் கொண்டு செல்ல வேண்டிய சூழல் போன்ற நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால், இந்தத் திட்டம் வரி செலுத்துவோரின் பணத்தை வீணடிக்கும் செயல் என்று அவர்கள் விமர்சித்துள்ளனர்.
இச்சிறை முன்பு செயல்பட்டபோது, மற்ற சிறைகளை விட மூன்று மடங்கு கூடுதல் செலவு பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

அல் கபோன் போன்ற பிரபல தாதாக்கள் அடைக்கப்பட்டிருந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை மீண்டும் சிறையாக மாற்றுவது அதன் அடையாளத்தை அழித்துவிடும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி ஒதுக்கீட்டுத் திட்டத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் (Congress) ஒப்புதல் கிடைப்பது அவசியமாகும்.
போர்க்களத்தில் களமிறக்கப்படும் அதி சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பு! ஈரானின் எச்சரிக்கையினால் மீண்டும் பதற்றம்