தேர்தல் குறுக்கீடு விவகாரம் : மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள ட்ரம்ப்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) மீதான தேர்தல் குறுக்கீடு விவகாரத்தில் தற்போது மீண்டும் நான்கு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் 2020 ஜனாதிபதி தேர்தலை சீர்குலைக்க முயற்சி முன்னெடுத்ததாக குறிப்பிட்டு தொடரப்பட்ட வழக்கிலே தற்போது ட்ரம்ப் மீண்டும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
2021 ஜனவரி 6ஆம் திகதி நாடாளுமன்றம் மீது கலவரத்தை தூண்டிய வழக்கிலும் டர்ம்ப் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ நடவடிக்கைகள்
தற்போது இவர் மீது அமெரிக்காவை ஏமாற்ற சதி, உத்தியோகபூர்வ நடவடிக்கைகளைத் தடுக்கும் சதி, உத்தியோகபூர்வ நடவடிக்கையைத் தடுக்க முயற்சி மற்றும் உரிமைகளுக்கு எதிரான சதி என நான்கு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இருப்பினும், ட்ரம்ப் மீதான சில குற்றச்சாட்டுகளை தவிர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் அவர் மீதான குற்றச்சாட்டுகளின் விளக்கங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் குறுக்கீடு வழக்கில் முன்னாள் ஜனாதிபதிக்கு சில விதிவிலக்குகள் உண்டு என உச்ச நீதிமன்றம் ஜூலை மாதம் தீர்ப்பளித்தது. இந்த நிலையிலேயே தற்போது ட்ரம்ப் மீது நான்கு பிரிவுகளில் குற்றச்சாட்டு மீண்டும் பதியப்பட்டுள்ளது.
ஆனால் ட்ரம்ப் எதிர்கொள்ளும் குற்றச்சாட்டுகளில் அவர் இதுவரை குற்றவாளி என உறுதி செய்யப்படவில்லை.
மேலும் தம் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் ட்ரம்ப் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
|  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  | 
    
    
    
    
    
    
    
    
    
    அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam