அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்.. 93 வினாடிகளில் வெள்ளை மாளிகையில் நிகழ்ந்த பதற்றம்
வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (WHCA) வருடாந்திர இரவு விருந்து நிகழ்ச்சியில் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேடையிலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டார்.
நேற்று இரவு (ஏப்ரல் 25, 2026) சுமார் 8:36 மணியளவில், வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலின் பாதுகாப்பு சோதனைச் சாவடி அருகே இந்த துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது.
ஜனாதிபதி ட்ரம்ப், முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தபோது, வெளியே துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது.
நான் ஒரு ஈரானிய உளவாளியாக இருந்திருந்தால்.. - ட்ரம்ப் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் அதிர வைக்கும் வாக்குமூலம்
2,600 விருந்தினர்கள்
லிபோர்னியாவின் டொரன்ஸைச் சேர்ந்த கோல் டோமஸ் ஆலன் (Cole Tomas Allen - 31) என்ற நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளை இலக்கு வைப்பது குறித்த ஒரு 'மேனிஃபெஸ்டோ' (Manifesto) கண்டெடுக்கப்பட்டுள்ளது. கைதான நபரிடமிருந்து ஒரு ஷாட்கன், கைத்துப்பாக்கி மற்றும் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மோதலில் இரகசிய சேவை (Secret Service) அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். இருப்பினும், அவர் அணிந்திருந்த குண்டு துளைக்காத கவசம் (Bulletproof vest) அவரது உயிரைக் காப்பாற்றியது.
துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன் பாதுகாப்பு அதிகாரிகள் "துப்பாக்கிச் சூடு" (Shots fired) என எச்சரித்தனர். இதனால் அங்கிருந்த சுமார் 2,600 விருந்தினர்கள் அச்சத்தில் மேசைகளுக்கு அடியில் பதுங்கினர்.
சம்பவத்திற்குப் பிறகு வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜனாதிபதி ட்ரம்ப், இரகசிய சேவை அதிகாரிகளின் துரித நடவடிக்கையைப் பாராட்டினார்.
தீவிர விசாரணையில் FBI
"அவர்கள் மிகவும் வீரத்துடன் செயல்பட்டனர். இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம், ஆனால் நாம் இத்தகைய குற்றவாளிகளுக்கு அஞ்சப்போவதில்லை. இந்த நிகழ்ச்சி விரைவில் மீண்டும் நடத்தப்படும்," என்று அவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதலில் வேறு யாருக்கும் தொடர்பில்லை என்றும், இது ஒரு தனிப்பட்ட நபரின் செயல் (Lone Wolf) என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வாஷிங்டன் பொலிஸாரும் எப்பிஐ-யும் (FBI) தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளன.
கைதான ஆலன் மீது கூட்டாட்சி அதிகாரி மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக, வாஷிங்டனின் மிக முக்கியமான சமூக நிகழ்வாகக் கருதப்படும் பத்திரிகையாளர் இரவு விருந்து பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அடுத்த 30 நாட்களுக்குள் இந்த நிகழ்ச்சி மீண்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
You may like this..
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 8 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam