ஈரான் தொடர்பில் டிரம்ப் வெளியிட்டுள்ள எச்சரிக்கை
ஈரானிடம் எந்தச் சூழ்நிலையிலும் அணுஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதே அமெரிக்காவின் இறுதி தீர்மானம் என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கையைக் கைவிடப் போவதில்லை எனவும், அமெரிக்க ராணுவம் எப்போது வேண்டுமானாலும் போருக்குத் தயாரான நிலையில் (Locked and Loaded) உள்ளதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கப் போர்க்கப்பல்கள் முழு ஆயுதங்களுடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இறுதி முடிவை எடுப்பதற்குத் தான் அடுத்த வாரத் தொடக்கம் வரை கால அவகாசம் வழங்கக்கூடும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஈரானுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் வேகம் திருப்திகரமாக இல்லை எனவும், ஈரான் இந்த விடயத்தில் உண்மையிலேயே தீவிரமாக இருக்கிறதா என்பதில் தனக்கு இன்னும் முழு நம்பிக்கை வரவில்லை எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்த வேண்டியிருக்கலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது செலுத்தும் அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமின்றி, அவர் மீதான அரசியல் அழுத்தத்தையும் அதிகரித்துள்ளது.
இந்த மோதல் போக்கின் காரணமாக அமெரிக்க மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி மற்றும் பொருளாதார பாதிப்புகள் குறித்துப் பேசிய டிரம்ப், அதற்காகத் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
மக்கள் இதனால் எதிர்நோக்கும் அசௌகரியங்களை எண்ணி தான் வருந்துவதாகவும், அதே நேரத்தில் இந்த இராணுவ நடவடிக்கை முற்றிலும் சரியான ஒன்றுதான் என்றும் அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam