ஈரானின் சமாதான முனைப்புகள் குறித்து ட்ரம்ப் அதிருப்தி
ஈரான் சமர்ப்பித்துள்ள அண்மைய சமாதான திட்டத்தில் தனக்குத் திருப்தி இல்லை எனவும், அந்த நாடு ஒரு நிலையான உடன்படிக்கையை ஏற்குமா என்பதில் சந்தேகம் உள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் உரையாற்றிய போது அவர் இந்தவ விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஈரான் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்ள விரும்புகிறது என்பதை நான் அறிவேன். ஆனால், அவர்கள் இப்போது முன்வைத்துள்ள திட்டத்தில் எனக்குத் துளியும் திருப்தி இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஈரானியத் தலைமைக்குள் பெரும் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக அவர் விமர்சித்தார்.
அங்குள்ள தலைமை மிகவும் சிதறிப்போய் உள்ளது. இரண்டு, மூன்று அல்லது நான்கு குழுக்களாக அவர்கள் பிரிந்து கிடக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒப்பந்தம் செய்ய விரும்பினாலும், ஒருமித்த கருத்தின்றி குழப்பத்திலேயே உள்ளனர் என ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஈரான் பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றங்களை எடுத்துள்ள போதிலும், அவர்களால் ஒரு இறுதி முடிவை எட்ட முடியுமா என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் முன்மொழிவில் எதனைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை ட்ரம்ப் துல்லியமாக விவரிக்கவில்லை. எனினும், ஈரானில் நிலவும் அரசியல் குழப்பங்களே ஒரு நிரந்தரத் தீர்வுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக பாகிஸ்தான் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியிலான ஆவணங்கள் பரிமாறப்பட்டு வரும் நிலையில், ட்ரம்ப்பின் இந்தத் திடீர் அதிருப்தி பேச்சுவார்த்தையில் தொய்வை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri