தொடரும் ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகள்: மற்றுமொரு நாட்டிற்கு நிதியை நிறுத்த திட்டம்
பதவியேற்றதிலிருந்து அதிரடியான நடவடிக்கைளில் ஈடுபட்டுவரும் டொனால்ட் ட்ரம்ப் தற்போது தென் ஆபிரிக்காவுக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தென் ஆபிரிக்காவில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாக தெரிவித்தே டொனால்ட் ட்ரம்ப் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடியான நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வரி விதிப்பு
பல நாடுகளுக்கு வரி விதிப்பையும் நடைமுறைப்படுத்தியுள்ளார்.
இதற்கு கனடா(Canada) மற்றும் சீனா(China) ஆகிய நாடுகள் தங்களது எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளன. அத்துடன் பல நாடுகளுக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவதாக அவர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையிலேயே தற்போது தென் ஆபிரிக்காவுக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ட்ரம்ப்பின் அறிவிப்பு
இது தொடர்பான அவரது அறிவிப்பில்,
"தென் ஆபிரிக்க நாட்டில் புதிய நில அபகரிப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் நடைபெறுகிறது.
இதற்கு துணையாக அமெரிக்கா நிற்காது. அந்நாட்டிற்கு வழங்கப்படும் நிதி உதவி நிறுத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உக்ரைனுக்கு எதிரான போரை உடனடியாக நிறுத்தாவிட்டால் கூடுதல் வரி விதிப்பையும், கடுமையான பொருளாதார தடைகளையும் ரஷ்யா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் ட்ரம்ப் எச்சரித்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |