ஈரானில் நடைபெற்ற பாரிய தாக்குதல் -அழிக்கப்பட்ட பல இராணுவ தலைவர்கள்! ட்ரம்ப் பகிர்ந்துள்ள பரபரப்பு காணொளி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது Truth Social தளத்தில் ஒரு காணொளியை பகிர்ந்துள்ளார்.
அந்த காணொளியில், ஈரானின் தலைநகரமான தெஹ்ரானில் நடைபெற்ற “பெரும் தாக்குதல்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ தலைவர்கள்
அவர் மேலும், ஈரானின் பல இராணுவ தலைவர்கள் அவர்கள் நாட்டை தவறாகவும் அறிவில்லாமலும் வழிநடத்தியவர்கள் இந்த தாக்குதலின் பின்னர் அழிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
அந்த காணொளியில், இரவு நேரத்தில் படமாக்கப்பட்ட பெரிய வெடிப்புகள் காணப்படுகின்றன. ஆனால் அது எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது தெளிவாக தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து அமெரிக்கா மேலும் எந்த விவரங்களையும் வழங்கவில்லை. அதே நேரத்தில், ட்ரம்பின் இந்தக் கூற்றுக்கு தெஹ்ரானில் இருந்து இதுவரை எந்த பதிலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா - இஸ்ரேலுக்கு நரகத்தின் வாயில்கள் திறக்கப்படும்..! ட்ரம்பின் எச்சரிக்கையை தொடர்ந்து ஈரானின் சூளுரை
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri