எரிபொருள் விலையை உடனடியாக குறையுங்கள்! மத்திய கிழக்கை எச்சரித்த ட்ரம்ப்
எரிபொருள் விலையை உடனடியாக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சவுதி அரேபியா மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகளிடம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
டாவோஸ் நகரில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டின் போனதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எரிபொருளின் விலை குறைக்கப்படாவிடின், மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா அதிக வரியை விதிக்கும் எனவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
சவுதி அரேபியாவின் பதில்
ரஷ்யா - உக்ரைன் போர்நிறுத்தத்தை கொண்டுவர எரிபொருள் விலைகுறைப்பு முக்கியமான அம்சம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
pic.twitter.com/pWtPyJ3IQ6
— art (@art2i) January 25, 2025
Trump e-speaks to WEF at Davos '25 on the beginning of the Golden Age of America, Thur, 1/23.
ie, Grow economy, cut wasteful gov spending, cut taxes, deregulate 🇺🇸, save free speech, end lawfare, abolish DEI, only two genders, reduce oil price, lower…
எவ்வாறாயினும், இந்த எரிபொருள் விலைகுறைப்பு தற்போது சாத்தியமில்லை என சவுதி அரேபிய அரசாங்கம் கூறியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |