ட்ரம்பின் நிகழ்வில் திடீரென ஆயுதங்களுடன் நுழைந்த நபர்! வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல்
தனது இலக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தொடர்புடைய அதிகாரிகள் என்று அமெரிக்கா - வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் துப்பாக்கிச்சூடு நடத்த வந்தவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணையாளர்களிடம் அவர் இந்த தகவலை வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், சந்தேகநபர் ஜனாதிபதியை குறிவைத்தாரா என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருவதாகவும், அவர் தனியாகவே செயல்பட்டுள்ளதாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
திடீரென நுழைந்த ஆயுததாரி! சரமாரியான துப்பாக்கிச்சூட்டை நடத்திய பாதுகாப்பு படை - ட்ரம்ப் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்
பல ஆயுதங்களுடன் நுழைந்த சந்தேகநபர்
வெள்ளை மாளிகையில் நேற்று இரவு நடைபெற்ற செய்தியாளர்கள் இரவு விருந்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் பிற மூத்த அரச அதிகாரிகள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது பல ஆயுதங்களுடன் நுழைந்த சந்தேகநபர் திடீரென ஐந்து முதல் எட்டு வரையான துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது உழவுத்துறை அதிகாரி சுடப்பட்டதாகவும், அவரது குண்டு துளைக்காத கவச உடையால் காப்பாற்றப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
பாதுகாப்பு தேடி பதுங்கிய நூற்றுக்கணக்கானோர்
இதனைத் தொடர்ந்து, மண்டபத்தில் இருந்த நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் மற்றும் பிரபலங்கள் பாதுகாப்பு தேடி மேசைகளுக்கு அடியில் பதுங்கியுள்ளனர்.

இதன்போது பாதுகாப்புப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி சந்தேகநபரை கட்டுப்படுத்தி கைது செய்திருந்தனர்.
இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சந்தேகநபர் விசாரணையாளர்களிடம் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
பாதுகாப்புப் படைகளின் கூற்றுப்படி, கலிபோர்னியாவைச் சேர்ந்த 31 வயது நபர் என அடையாளம் காணப்பட்ட குறித்த நபர், துப்பாக்கிச் சூட்டின்போது 5 முதல் 8 முறை வரை சுட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச்சூடு ஈரான் போருடன் தொடர்பானதல்ல
மேலும், சந்தேகநபர் உயர் கல்வி கற்ற ஒரு பயிற்றுநர் மற்றும் தொழில்முறை அல்லாத வீடியோ கேம் வடிவமைப்பாளர் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட இந்த நிகழ்வு, அடுத்த 30 நாட்களுக்குள் மீண்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்தப் பகுதியில் தேசிய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல், அமெரிக்காவில் நடக்கும் அரசியல் வன்முறை மற்றும் வரலாற்றில் அதிகம் குறிவைக்கப்பட்ட ஜனாதிபதிகளில் ஒருவரான ட்ரம்பைச் சுற்றியுள்ள பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
இந்நிலையில், வொஷிங்டனில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது ஈரான் போருடன் தொடர்புடையது இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால், தெஹ்ரான் மீதான தனது நடிவடிக்கைகள் இந்த துப்பாக்கிச் சூட்டில் தன்னை இலக்காக மாற்றியிருக்கலாம் அதனால் தான் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி - ஆபத்தான நிலையில் ஒருவர்
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 18 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam