இலங்கை தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த ஆவணத்தை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!
இலங்கை தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணம் ஒன்றை அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது.
1948ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் அந்நாட்களில் இலங்கையின் பிரதமராக பதவி வகித்த டி.எஸ்.சேனநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தை, இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில், இந்த கடிதம் எங்கள் காப்பகங்களில் உள்ள விரும்பப்படும் ஆவணங்களில் ஒன்று என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இலக்குகளை அடைவதற்கான முயற்சி
உங்களில் சிலர் சரியாக யூகித்துள்ளபடி இது அப்போதைய இலங்கையை சுதந்திர நாடாக அங்கீகரித்து 1948 இல் ஜனாதிபதி ஹரி எஸ்.ட்ரூமன் இலங்கையின் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவுக்கு அனுப்பிய கடிதமாகும்.
இலங்கையுடன் நெருக்கமான இராஜதந்திர உறவுகளை பேணுவதற்கான,வலுவான பாதுகாப்பான இந்தோ பசுபிக்கில் இலங்கையின் சகா என்று பகிர்ந்துகொள்ளப்பட்ட இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளின் போது ட்ருமனின் வார்த்தைகளை பின்பற்றுகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 4 மணி நேரம் முன்

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
