ட்ரம்ப்பிற்கு எதிராக களமிறங்கிய ட்ரூடோ! வர்த்தக போரின் ஆரம்பம்
கனேடிய மக்கள் அமெரிக்க உற்பத்தி பொருட்களை விடுத்து கனடாவின் உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்யுமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனேடிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரியை விதித்துள்ளதால் ட்ரூடோ இவ்வாறு வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் உற்பத்திப் பொருட்கள் மீது, ட்ரம்ப் 25% வரியை விதித்துள்ளார்.
உறவில் விரிசல்
இதனையடுத்து, இதற்கு பதிலடி அளிக்கும் வகையில், அமெரிக்கப் பொருட்கள் மீது கடுமையான வரியை விதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அத்துடன், புவிசார் அமைவிடம் எங்களை அயல்நாடுகளாக உருவாக்கியது, வரலாறு எங்களை நண்பர்களாக மாற்றியது மற்றும் பொருளாதாரம் எங்களை பங்காளர்கள் ஆக்கியது என பல வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன் எப் கெனடி கூறியிருந்ததை ட்ரூடோ நினைவுபடுத்தியுள்ளார்.
இன்று, அமெரிக்க அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வரிவிதிப்பு எங்களை பிளவுப்படுத்தி விட்டதாக அவர் கூறியுள்ளார்.
ட்ரூடோவின் பதிலடி
இது இவ்வாறு நடக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் ட்ரூடோ கவலை வெளியிட்டுள்ளார்.
🚨🇨🇦🇺🇸 | Guerra comercial: El ultra-progresista primer ministro de Canadá, Justin Trudeau, anunció que impondrá aranceles del 25% a Estados Unidos de la misma manera que Trump hizo con Canadá.
— La Derecha Diario (@laderechadiario) February 2, 2025
Más del 75% de las exportaciones de Canadá son a Estados Unidos, mientras que las de… pic.twitter.com/t1y4ZSL3vj
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்காவின் 155 பில்லியன் டொலர் பெறுமதியான அமெரிக்க பொருட்கள் மீது 25% வரியை விதிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 125 பில்லியன் டொலர் பெறுமதியான அமெரிக்க உற்பத்திகள் மீதும் மேலதிக வரியை விதிக்க இருப்பதாகவும் ட்ரூடோ கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |