ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக தொடர்வதற்கான சாத்தியப்பாடு: வெளியான கருதுகோள்
கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எதிர்வரும் வருடம் வரை பிரதமராக தொடர வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 9 வருடங்கள் பிரதமர் பதவியில் நிலைத்ததன் பின்னர் ட்ரூடோ, தனக்கான ஆதரவை பெருமளவில் இழந்துள்ளார்.
கடந்த வாரம், புதிய ஜனநாயகக் கட்சியின் ட்ரூடோவுக்கான ஆதரவும் சந்தேகத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், அவரின் பிரதமர் பதவி மேலும் கேள்விக்குறியாகியுள்ளது.
விரைவான நாடாளுமன்றத் தேர்தல்
தற்போது, மொத்தம் 354 கனேடிய நாடாளுமன்ற ஆசனங்களில் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெறும் 154 ஆசனங்களை மட்டுமே கொண்டுள்ளது.
இந்நிலையில், 170 நாடாளுமன்ற உறுப்பினர்கள் லிபரல் கட்சிக்கு எதிராக வாக்களித்தால், அரசாங்கம் அதன் பதவிக்கலமான 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்கு முன்னதாகவே கலைக்கப்படும்.
இது விரைவான நாடாளுமன்றத் தேர்தலுக்கு வழிவகுக்கும்.
புதிய ஜனநாயகக் கட்சி
இவ்வாறான சூழ்நிலையில், கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன.
கனேடிய நாடாளுமன்றத்தில் அடுத்த நம்பிக்கை வாக்கெடுப்பு நவம்பர் மாத இறுதியில் அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில் நடைபெறவுள்ள நிலையில், ட்ரூடோவின் பிரதமர் பதவி குறைந்தது இரண்டு மாதத்திற்கு நீடிக்கும்.
இதேவேளை, நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் பட்சத்தில், புதிய ஜனநாயகக் கட்சி அப்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு வாக்களிக்கும் என அக்கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே, 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிரதமராக ட்ரூடோ தொடர்வதற்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
