அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக கனடா: ஜஸ்டின் ட்ரூடோ கூறிய காரணம்
கனடாவை(Canada) அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்றுவதற்கு இது தான் காரணம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு முக்கியமான கலந்துரையாடலில் கூறியதாக கனடாவின் முக்கிய செய்தி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
அமெரிக்க(USA) ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) பதவியேற்றதிலிருந்தே பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகின்றார்.
இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) பதவி விலகுவதாக அறிவித்த நிலையில், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக இணைத்துக் கொள்வதாக டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்தார்.
அமெரிக்காவின் 51ஆவது மாகாணம்
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்த ட்ரம்ப், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைப்பதற்கான யோசனையை அவரிடம் தெரிவித்திருந்தார்.
மேலும், கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாகப் பிரிக்கலாம். அதற்கு ஆளுநராக உங்களை நியமிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து டொனால்டு ட்ரம்ப் தம்முடைய சமூக வலைதள பக்கங்களிலும் இது குறித்து கருத்துகளைப் பகிர்ந்திருந்தார். அத்துடன் கனடா - அமெரிக்கா எல்லை குறித்த வரைபடத்தையும் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் தான் அண்மையில் கனடா, சீனா மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பேச்சுவார்த்தைக்குப் பிறகு கனடா, மெக்சிகோ மீதான வரிவிதிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஜஸ்டின் ட்ரூடோ பேசிய தகவல்கள்
அதனை தொடர்ந்து, , கனடாவில் வர்த்தக அமைப்பினருடன் மூடப்பட்ட அறையில் நடந்த ஒரு தனிப்பட்ட சந்திப்பின் போது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசிய தகவல்கள் கசிந்ததாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் தான் டொனால்ட் ட்ரம்பின் திட்டம் குறித்தும் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவில் உள்ள இயற்கை வளங்கள் மூலம் பலனடைவதே ட்ரம்ப்பின் விருப்பம், அதனால் தான் அடிக்கடி நம்மை அமெரிக்காவுடன் இணைத்து அதன் 51வது மாகாணமாக மாற்றுவது பற்றி பேசி வருகிறார்கள்.
அவர்கள் நமது வளங்களைப் பற்றியும், நம்மிடம் என்னவெல்லாம் இருக்கிறது என்பது பற்றியும் நன்கு அறிந்து வைத்திருப்பதுடன் அவற்றின் பயன்களை அடையவும் விரும்புகிறார்கள்" என ட்ரூடோ பேசியதாக கனடா நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், ஜஸ்டின் ட்ரூடோ பேசியதாக ஊடகங்களில் வெளியான தகவல் குறித்து பிரதமர் அலுவலகம் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
பசுமை எரிசக்திக்கான முக்கிய தேவைகளான லித்தியம், கிராஃபைட், நிக்கல், தாமிரம் மற்றும் கோபால்ட் போன்ற தாதுக்கள் கனடாவில் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
