ஹலோ ஜெலென்ஸ்கி! ஜஸ்டினும், ரிஷி சுனக்கும் பேசுகின்றோம்!வைரலாகும் கனேடிய பிரதமரின் காணொளி
ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ள கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைனுக்கு ஆதரவாக கனடா நிற்கும் என அறிவித்துள்ளார்.
இதில் கலந்துகொண்ட கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 'ரஷ்யாவின் மிருகத்தனமான போர் உக்ரைனில் உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிகளை உருவாக்கியுள்ளதாகவும்,உக்ரைனுக்கு ஆதரவாக கனடா நிற்கும் எனவும் உறுதியளித்திருந்தார்.
மேலும் கூட்டாண்மையை விரிவுபடுத்துவதன் மூலம் நமது பொருளாதாரத்தை உயர்த்த முடியும் மற்றும் கனேடியர்கள் சவால்களையும் எதிர்கொள்ள முடியும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு போன் செய்து பேசுவது போன்ற காணொளியினை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிர்ந்துள்ளார்.
அதில், ரிஷி சுனக்குடன் அமர்ந்திருக்கும் ட்ரூடோ, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை செல்போனில் அழைத்து ''ஹலோ வோலோடிமிர்..ரிஷி மற்றும் ஜஸ்டின் பேசுகின்றோம்'' என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த காணொளி சமூக வளைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
From the @G20org today: @RishiSunak and I spoke with @ZelenskyyUa as we stand firm with the people of Ukraine. We also announced Canada is extending our training mission of Ukrainian soldiers in the UK until the end of next year. pic.twitter.com/xfuSZMPNqO
— Justin Trudeau (@JustinTrudeau) November 16, 2022