நுவரெலியா - லபுகலை லொறி விபத்து: 14 பேர் காயம்: 5 பேர் கவலைக்கிடம் (Video)
நுவரெலியா - லபுகலை தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பாறையில் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ள நிலையில், 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்றைய தினம் (05.03.2023) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
லபுகலை பிரதேசத்திலிருந்து நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை ஏற்றச் சென்ற தொழிலாளர்கள் குழுவே இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர்.
லொறி விபத்து
விபத்தில் படுகாயமடைந்த 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்களை கொத்மலை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் லபுகெலே பிரதேச வாசிகள் இணைந்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
விபத்தின் போது லொறியில் 15 பேர் பயணித்ததாகவும், அவர்களில் ஒருவர் லொறியில் இருந்து குதித்துத் தப்பியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிவேகமாகச் செலுத்தப்பட்ட லொறி வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாறையிலிருந்து மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் லொறி விபத்துக்குள்ளாகும் காட்சிப் பதிவாகியுள்ளது.







அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
