தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்கான பயணம் யாழில் ஆரம்பம்(Photos)

Colombo Jaffna Sri Lankan political crisis
By Theepan Sep 10, 2022 04:14 PM GMT
Report

ஜ.நா அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக அரசியல் கைதிகளின் உறவுகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு இன்றைய தினம் சர்வதேச கவனமொன்றை ஈர்த்துக்கொள்ளும் வகையில் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்தல்

தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்கான பயணம் யாழில் ஆரம்பம்(Photos) | Trip Meet Tamil Political Prisoners Jaffna

குரலற்றவர்களின் குரல் அமைப்பு யாழ் ஊடக அமையத்தில் இன்று மதியம் 2 மணியளவில் நடாத்திய ஊடக சந்திப்புக்கு பின்னர் இந்த பயணத்தை ஒழுங்குபடுத்தப்பட்ட பேருந்தில் மேற்கொண்டுள்ளனர்.

தேசிய சிறைக் கைதிகள் தினம் செப்டெம்பர் 12ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் இந்த பயணம் ஆரம்பிக்கப்பட்டதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் சிலர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வலுச்சேர்க்கும் வகையில் அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு

தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்கான பயணம் யாழில் ஆரம்பம்(Photos) | Trip Meet Tamil Political Prisoners Jaffna

நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், யாழ்.மாநகர பிரதி முதல்வர் து.ஈசன், யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன், யாழ் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்க பிரதிநிதிகள் எனப் பலரும் யாழ் ஊடக அமையத்திற்கு வருகைதந்து பயணத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு, உறவினர்கள் சென்று வருவதற்கான போக்குவரத்து ஒழுங்குகளை கனேடிய தமிழர் பேரவை யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், மாநகர உறுப்பினர் பார்த்தீபன் ஊடாக ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா

தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்கான பயணம் யாழில் ஆரம்பம்(Photos) | Trip Meet Tamil Political Prisoners Jaffna

நீண்ட நாட்களுக்கு பின்னர் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக கொழும்பு நோக்கி பயணிக்கும் அரசியல் கைதிகளின் உறவுகளை வவுனியாவில் வரவேற்று உணவளித்து வழியனுப்பி வைக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்கான பயணம் யாழில் ஆரம்பம்(Photos) | Trip Meet Tamil Political Prisoners Jaffna

பல வருடங்களாக உறவுகளை சந்திக்காமல் சிறையில் வாடும் வடமாகாணத்தை சேர்ந்த அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த அரசியல் கைதிகளின் உறவுகளுக்கு அவர்களின் பயணத்திற்கு ஆதரவளித்து உதவும் பொருட்டு வவுனியாவில் தமிழ் விருட்சம் அமைப்பின் ஏற்பாட்டில் மாலை நேர தேநீர் உபசாரமும் இரவு உணவும் வழங்கி வழியனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

செய்தி-ஷான்

இதேவேளை நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்கான பயணத்தை மேற்கொண்ட அரசியல் கைதிகளின் உறவுகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.






GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US