திருகோணமலையில் வீதியை முடக்கி பாரிய போராட்டம் (Photos)
திருகோணமலை - கண்டி பிரதான வீதியான அபயபுர சுற்று வளைவு சந்தியில் மூன்று பக்கமாகவும் ஆர்ப்பாட்டகாரர்களால் வீதித் தடை போடப்பட்டு, வீதி மறிக்கப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப் போராட்டமானது இன்று(20) காலையில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் பேரூந்து ஒன்றினை வீதிக்கு குறுக்கே நிறுத்தி உப்புவெளி பகுதிக்குச் செல்லும் வீதியும் மறிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடைகள் மற்றும் மத்திய மீன் சந்தை மூடப்பட்டுள்ள அதே வேளை பாடசாலைக்கும்
மாணவர்கள் செல்லவில்லை ,அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு்ள்ளது.
மேலும் காலை, தொழில் நிமித்தம் சென்ற பலரும் படையினரால் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.



