திருகோணமலை மாவட்ட செயலக கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டம்
திருகோணமலை மாவட்டத்தின் 2025ஆம் ஆண்டுக்கான முதலாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவ குழுக்கூட்டமானது இன்று (26) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கூட்டமானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமாரவின் தலைமையில் இடம்பெற்றது.
கலந்து கொண்டோர்
இதன்போது, மாவட்ட செயலகம் உட்பட பிரதேச செயலகங்களின் கணக்காய்வு முகாமைத்துவம் தொடர்பான விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், சிரேஷ்ட உதவி கணக்காய்வாளர் தலைமை அதிபதி (கிழக்கு மாகாணம்) எம்.எச்.எம். அரபாத் , பிரதேச செயலக கணக்காளர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வு கிளை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
ஜனனி செய்த காரியம், குணசேகரன் மீது வருத்தத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam