மரக்கறிகள் விலை குறைந்தாலும் மக்களிடம் பணமில்லை (photos)
திருகோணமலை - கந்தளாய் பொது சந்தையில் தமிழ் சிங்கள புத்தாண்டுக்காக கொண்டுவரப்பட்ட மரக்கறிகளின் விலை குறைந்து காணப்பட்டாலும் மக்களிடம் பணமில்லை என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை - கந்தளாய் மற்றும் மூதூர், தம்பலகாமம் போன்ற பகுதிகளில் மக்கள் சனக்கூட்டங்களை அவதானிக்க முடிகின்றது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
பொருட்களின் அதிக விலை
இந்தநிலையில் தமிழ் சிங்கள புத்தாண்டு களைகட்டும் போது துணிக்கடைகளிலும் அதிக விலைக்கு உடைகள் விற்கப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பண்டிகைகளை முன்னிட்டு பொருட்கொள்வனவு
அத்துடன் தமிழ் சிங்கள புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகைகளை முன்னிட்டு மக்களின் பொருட் கொள்வனவுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
மேலும், மக்களிடம் பணம் இல்லா விட்டாலும் கடைகளின் மக்கள் கூட்டங்கள் நிறைந்து வழிகின்றமையினை காணக்கூடியதாக உள்ளது என எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.








இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 18 மணி நேரம் முன்

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
