திருமலையில் துறைமுக அதிகார சபையினர் மக்கள் குடியிருப்புக்குள் நில அளவை மேற்கொள்ள முயற்சித்ததால் பரபரப்பு
திருகோணமலை(Trincomalee) மாவட்ட பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள முத்து நகர் கிராமத்தில் இன்று(03) இலங்கை துறைமுக அதிகார சபையின் அதிகாரிகள் நில அளவை மேற்கொண்ட முயற்சியால் மக்கள் பலத்த எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
இதன் காரணமாக அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
பொது மக்களின் நிலம்
பொது மக்களின் விவசாய பயிர்ச் செய்கை குடியிருப்பு காணிகளை நில அளவை செய்யும் நோக்கில் துறை முக அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் பொலிஸாருடன் வருகை தந்திருந்தனர்.
குறிப்பிட்ட காணிகளை தனியார் முதலீட்டுக்காக சூரிய மின் சக்தி உள்ளிட்டவற்றை மையமாக கொண்டு நீண்ட கால குத்தகைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அங்கு மக்கள் கொதித்தெழுந்துள்ளனர்.
குறித்த சம்பவ இடத்துக்கு தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன விஜயம் செய்து குறித்த துறை முக அதிகார சபை உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு இது தொடர்பில் உரிய அமைச்சுக்களின் பேச்சுவார்த்தையின் பிரகாரம் முடிவெடுப்பது தொடர்பில் பரிசீலனை செய்யப்பட வேண்டும் எனக் கோரியதன் அடிப்படையில் அங்கிருந்து தற்காலிகமாக உரிய அதிகாரிகள் கலைந்து சென்றனர்.
அச்சுறுத்தல்
அத்துடன் காணிக்கான நில அளவீடும் பொது மக்களின் உதவியுடன் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த முத்து நகர் கிராமத்தில் பல வருட காலமாக விவசாயத்தை நம்பியே வாழ்வாதாரமாக பயிர்ச் செய்கையில் ஈடுபடுகின்றனர்.
இருந்த போதும் துறை முக அதிகார சபையினரின் அச்சுறுத்தல் தொடர்ந்தும் நீடித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

நடிகையுடன் கிசுகிசு.. உண்மையான மனைவி போட்டோவை வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் ஸ்டாலின் Cineulagam
