குச்சவெளி - பெரியமலையில் கற்கள் உடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் (Photos)
திருக்கோணமலை - குச்சவெளி பெரியமலையில் கற்களை உடைத்து அகற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (07.08.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெரியமலையானது தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்டு, அங்கு கற்கள் அகற்றுவதற்கான பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், அங்கு கற்கள் உடைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு அரச அதிகாரிகள் பராமுகமாக இருப்பதாகவும் குறிப்பிட்டு, குச்சவெளி பிரதேச செயலக வாயிலை மறித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களின் கோரிக்கை
சம்பவ இடத்திற்கு வருகை தந்த குச்சவெளி உதவி பிரதேச செயலாளர், மக்களின் கோரிக்கையைக் கேட்டறிந்துள்ளார்.
மேலும், இரண்டு வாரகால அவகாசம் தருமாறும் அந்த காலபகுதிக்குள் இந்த விடயம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தீர்க்கமான முடிவு பெற்றுத்தர முடியும் எனவும் உறுதியளித்திருந்த நிலையில், தற்காலிகமாக ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த மலையானது முன்பு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டிருந்தாகவும் பொது மக்கள் எதிர்ப்பு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிக்னறது.









அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam
