கடமையில் ஈடுப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு இடையூறு விளைவித்த சந்தேகநபருக்கு விளக்கமறியல்
திருகோணமலை- ஹொரவ்பொத்தானை பிரதான வீதி ரொட்டவெவ வீதி சோதனை சாவடியில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தரை தாக்க முற்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் (4.10.2022)ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்றத்தில் இவ் வழக்கு விசாரணை நேற்று (29.09.2002) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தரவை தாக்க முயற்சி
திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதி ரொட்டவெவ வீதி சோதனை சாவடியில் கடமையில் இருந்த (28.09.2022) பொலிஸ் உத்தியோகத்தர் டிமோ பட்டா லொறியொன்றில் அனுராதபுரம் பகுதியில் இருந்து திருகோணமலை நோக்கி இளைஞர்கள் சென்ற லொறியை நிறுத்தி உள்ளார்.
இந்நிலையில் பின்னால் இருந்து வந்த இளைஞரொருவர் மது போதையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தவுடன் அவர் அணிந்திருந்த சீருடையை கிழிப்பதற்கு முற்பட்டுள்ளார்.
மதுபோதையில் இருந்த சந்தேக நபர்
இதனையடுத்து குறித்த வீதி சோதனை சாவடியில் இராணுவத்தினர், சிவில் பாதுகாப்பு படை வீரர்கள், பொலிஸார் கூட்டாக இணைந்து கடமையில் இருந்த வேலை தாக்கியதாகவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் மிகிந்தலை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபரை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய போது மது போதையில் இருந்ததாகவும் வைத்தியரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.