“திருகோணமலை எண்ணெய் வளாகம்” -இந்தியாவின் உரிமை குறித்து அமைச்சர்களுக்கு இடையில் கருத்து மோதல்
திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகம் இந்தியாவுக்கே சொந்தமானது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்த தகவலை முன்னாள் எரிசக்தித்துறை அமைச்சர் .சுசில் பிரேம்ஜயந்த மறுத்துள்ளார்.
மேடைகளில் நெஞ்சில் கை வைத்து பேசும் கம்மன்பில போன்ற தேசப்பற்றாளர்கள் என்று கூறிக்கொள்வோரின் இந்த கருத்தை தாம் மறுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
சிங்கள செய்தித்தாளுக்கு இது தொடர்பில் கம்மன்பில வெளியிட்ட கருத்து பொய்யானது என்று பிரேம்ஜயந்த் குறிப்பிட்டுள்ளார்.
2003ஆம் ஆண்டு இந்த எண்ணெயெ் தாங்கி வளாகம் தொடர்பில் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி, குறித்த தொட்டிகள் இந்தியாவுக்கு சொந்தமானது என்றால், கடந்த 18 வருடங்களில் ஏன் அந்த தொட்டிகளை கைப்பற்றியிருக்காதா? என்று சுசில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவுக்கு குறித்த எண்ணெய் தாங்கிய வளாகத்தை வழங்க முயற்சிப்பவர்களே அது இந்தியாவுக்கு சொந்தமானது என்று கூறுவதாகவும் அமைச்சர் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்..
இந்தியாவுக்கு சொந்தமாக இருந்தால், ஏன் இந்தியா அந்த தொட்டிகளை சுத்தம் செய்யுமாறு கோருகிறது என்றும் சுசில் பிரேமஜயந்த வினவியுள்ளார்.
இதேவேளை திருகோணமலையின் நிலப்பெறுமதி இந்தியாவுக்கு தெரியும் என்பதால், இலங்கையின் இறைமையை பாதுகாத்துக்கொள்ள குறித்த எண்ணெய் குதங்கள் தொடர்பில் கூட்டு முயற்சி ஒன்றுக்கு செல்வதே சிறந்த வழியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
