போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது
திருகோணமலை -நிலாவெளி குற்றவியல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஐஸ் போதைப்பொருளுடன் நேற்றிரவு (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி நிலாவெளி பொலிஸ் நிலையத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் போது அலஸ்தோட்டம் பகுதியில் வைத்து சோதனையிட்டபோது கைது செய்யப்பட்டதாகவும் அவரிடமிருந்து 25 கிரேம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரான பொலிஸ் அதிகாரியை உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நிலாவெளி குற்றவியல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த என். எல். டி. ஞானக வதுரங்க கருணாரத்ன (33வயது) எனவும் தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பொலிஸ் அதிகாரியை திருகோணமலை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 8 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam