திருகோணமலை மாவட்டத்தில் பல வீடுகள் சேதம்
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக வீசி வருகின்ற கடும் காற்று காரணமாகப் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
கந்தளாய் பிரதேசத்தில் நேற்றிரவு வீசிய காற்று காரணமாக பாரிய மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.
இம்மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக வீசி வரும் கடும் காற்று காரணமாக வீடுகள் உடைந்துள்ளதோடு, வீடுகளிலுள்ள உயரமான மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.
இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக கந்தளாய் பிரதேசத்தில் 5 வீடுகளும், சேருவில பிரதேசத்தில் 8 வீடுகளும், குச்சவெளி பிரதேசத்தில் மூன்று வீடுகளும், தம்பலகாமம் பிரதேசத்தில் இரண்டு வீடுகளும், பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவில் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட செயலக அனர்த்த மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதனால் 19 குடும்பங்களைச் சேர்ந்த 73 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் பாரிய மரங்கள் வீதிகளில் விழுந்துள்ளதுடன், சில இடங்களில் வீதிப்
போக்குவரத்து தடைகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



