திருகோணமலையில் புதையல் தோண்டிய சந்தேக நபர்கள் கைது
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இடிமண் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபர்கள் நேற்றையதினம் (01.10.2023) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
கிண்ணியா இடிமண் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றைய தினம் இரவு புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது 6 பேர் கிண்ணியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சொகுசு வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் கிண்ணியா, இறக்கக்கண்டி மற்றும் கம்பஹா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கடந்த தேர்தலில் பிரதான அரசியல் கட்சி ஒன்றில் வேட்பாளராக களமிறங்கிய பெண் ஒருவரின் வீட்டில் புதையல் தோண்டுவதற்கான பூசை நிகழ்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் இன்றையதினம் (02.10.2023) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |