யாழில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி: காந்தீயம் ஏடு வெளியீடு (Photos)
மகாத்மா காந்தியின் 154 ஆவது பிறந்த தின கொண்டாட்ட நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று (02.10.2023) திங்கட்கிழமை காலை, யாழ். வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இவ் நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணம் இந்திய உதவித்துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் கலந்துகொண்டிருந்தார்.
காந்தீயம் ஏடு வெளியீடு

மேலும் நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு திருமுருகன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ்.மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன்.
மற்றும் சமய
சமூகப் பிரதிநிதிகள், இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், அகில இலங்கை காந்தி
சேவா சங்கத்தின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது காந்தீயம் ஏடு வெளியிட்டு வைக்கப்பட்டு அதன் பிரதிகள் அனைவருக்கும் வழங்கி வைக்கப்பட்டன.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |










லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam