திருகோணமலை பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு(Photos)
திருகோணமலை பொது வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் ஆளணி பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யுமாறு கோரி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று (21.07.2023) காலை 7.00 மணி முதல்
மதியம் 12.00 மணி வரை திருகோணமலை பொது வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றிருந்தது.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் பணியாற்றும் சிற்றூழியர்களது ஆளணி பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யுமாறு கடந்த 2016ம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் இதுவரை காலமும் குறித்த பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படவில்லை என தெரிவித்து சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆளணி பற்றாக்குறையால் அசௌகரியம்
கோஷங்களை எழுப்பியவாறு, பதாகைகளை ஏந்திய வண்ணம் ஆளணி பற்றாக்குறையின் காரணமாக தாம் பலத்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரிட்டுள்ளதுடன் பல வகைகளில் தாம் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு குறித்த பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுத்தராவிடின் தாம் பாரிய போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிற்றூழியர்கள் தெரிவித்திருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam

முடிவுக்கு வரப்போகும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சன் டிவியின் ஹிட் சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
