திருகோணமலையில் விவசாயிகள் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை (Video)
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் பகுதியில்
பதினாராயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்களில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு
தற்போது அறுவடை நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.
கடந்த காலங்களை விட இம்முறை ஒரு சில பகுதிகளில் நல்ல விளைச்சல்கள் இருந்த போதிலும் நெல்லுக்கு நிர்ணய விலை இல்லாததால் விவசாயிகள் இலாபத்தை ஈட்டிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கடனாளியாக மாறும் விவசாயிகள்
விவசாயிகள் வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு வேளாண்மை அறுவடைகள் நடைபெற்று கொண்டிருக்கின்ற வேளையில் நெல் வியாபாரிகள் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்வதாக தெரிவிக்கின்றனர்.
பல இலட்சம் ரூபாய்களை செலவு செய்துவேளாண்மை செய்கை மேற்கொண்ட நிலையில் இறுதியில் நெல்லுக்கான விலை இல்லாததால் தாம் பெரும் கடனாளியாக மாறுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அரசு இதனை கருத்தில் கொண்டு நிர்ணய விலையை விவசாயிகள் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |











கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
