ஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலீட்டாளர்களுக்கு கிழக்கு மாகாணத்தில் புதிய முதலீட்டு வாய்ப்பு!
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் கலித் மாசர் சுலைமான் அல் அமெரி ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (13) திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலீட்டாளர்களுக்கு கிழக்கு மாகாணத்தில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

நிரந்தரத் திட்டத்தைத் தயாரிப்பது பற்றி இலங்கைத் தூதரகத்தின் ஊடாக இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் கிளையொன்றை நிறுவி ஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலீட்டாளர்களுக்குத் தெரிவிக்கும் முறைமை ஒன்றை ஏற்படுத்துமாறும் தூதுவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுற்றுலா மற்றும் இயற்கை விவசாயம் ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வகையில் அந்த திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் மிக முக்கியமான சுற்றுலா தொடர்பிலான முக்கிய இடங்களை ஐக்கிய அரபு இராச்சியத்தின் சுற்றுலாப் பிரிவினருக்கு விளம்பரப்படுத்தி அவற்றை ஊக்குவிக்குமாறும் ஆளுநரிடம் தூதுவர் கோரிக்கை விடுத்ததுடன் இதுபற்றி விரைவில் அரசுக்கு தெரிவிப்பேன் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 2030 ஆம் ஆண்டிற்குள் நாட்டிலும் உலகிலும் உள்ள பல கடல் பகுதிகளில் 10 மில்லியன் சதுப்புநில செடிகளை நடும் சிறப்பு வேலைத்திட்டத்தை கொண்டுள்ளது.
வருடத்தின் தொடக்கத்தில் கிழக்கு மாகாணத்தின் கடல் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்படும் என தூதுவர் இந்தக் கலந்துரையாடலில் வலியுறுத்தினார்.

திருகோணமலை சுற்றுலாப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளுக்காக, சுப்பர் மார்க்கெட் மற்றும் சொகுசு ஹோட்டல் தேவைப்படுவதால், முதலீட்டாளர் ஒருவரை தொடர்பு கொள்ளுமாறும் ஆளுநர் இங்கு கோரிக்கை விடுத்தார்.
இச்சந்திப்பின் போது தூதுவர் மற்றும் ஆளுநர் நினைவு பரிசுகளை பரிமாறிக்கொண்டனர்.
இந்நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ் ரத்நாயக்க, பதில் ஆளுநர்
உதவி செயலாளர் ஏ.ஜி.தேவேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
    
    
    
    
    
    
    
    
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan