திருகோணமலையில் பேருந்து விபத்து: ஒருவர் படுகாயம் (Video)
திருகோணமலை - உட்துறைமுக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இந்த விபத்தானது நேற்று(01.01.2024) இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்போது விபத்தில் படுகாயம் அடைந்த நபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
மூதூர் டிப்போவிற்கு சொந்தமான பேருந்து உட்துறைமுக வீதிக்கு அருகில் வீதியை கடக்க முற்பட்டவருடன் மோதியதாகவும், இதனை அடுத்து ஆவேசத்தில் சிலர் பேருந்தை தாக்கியதாகவும் தெரிய வருகின்றது.

இதன்போது திருகோணமலை சீ.வீ.ரோட்- கஸ்தூரி நகரில் வசித்து வரும் 43 வயதுடைய கருப்பையா கருணாநிதி என்பவரே விபத்தில் காயம் அடைந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதியை திருகோணமலை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளதுடன் விபத்து தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை விபத்தினையடுத்து பேருந்தை தாக்கிய சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனனி உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடையும் குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam
கோபத்தில் சேரனை திட்டிய நிலா.. ராகவை அடித்த சோழன்.. அய்யனார் துணை சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam