திருகோணமலையில் வீட்டில் புதையல் தோண்டிய 8 பேர் கைது (Video)
திருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இன்று (3) அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தோப்பூர், கந்தளாய் மற்றும் ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த 45 வயதிலிருந்து 65 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் வெருகல், மாவடிச்சேனை பகுதியில் வீடு ஒன்றில் புதையல் தோன்றிய போதே வெருகல் பகுதியிலுள்ள இராணுவ புலனாய்வு பகுதியினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து எட்டு சந்தேக நபர்களை கைது செய்து ஈச்சிலம்பற்று பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
