திருகோணமலை விகாரை சம்பவத்தை காணொளி எடுத்தவருக்கு நேர்ந்த கதி
திருகோணமலை விகாரை சம்பவத்தை காணொளி எடுத்த ஊடகவியலாளர் அடையாளம் தெரியாத நபர்களால் கடுமையான தாக்குதலுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மீது வெள்ளிக்கிழமை (21.11.2025) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பில் வைத்திசாலையில் இருந்து அவர் வெளியிட்ட காணொளியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வெளியான காணாளி
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரை விரட்டியதற்கு பலி தீர்க்கும் வகையிலேயே என்னை தாக்கியுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதும் நோயாளர் காவு வண்டியில் கொண்டு செல்லும் போதும் தாக்கப்பட்டேன். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
என்னை தாக்கி சம்பவத்தையும்,விகாராதிபதியின் பிரச்சினையை திசை திருப்பியது போல, இந்த சம்பவத்தையும் சமூக ஊடகங்களில் திசை திருப்ப தேசிய மக்கள் சக்தியின் குழுவினர் முயற்சிக்கின்றனர்.

பிரச்சினை திசை திருப்பம்
தொடர்ச்சியாக வெளிநாட்டில் இருந்து ஒருவர் பல காணொளிகளை போடுகின்றார். அதற்கு இலங்கையில் இருக்கு NPP ஆட்கள் கமன்ட்கள் பதிவிட்டு சம்பவத்தை திசை திருப்புகின்றனர்.
இவ்வாறே விகாராதிபதிக்கும் மோசமான வார்த்தைகளில் சில சம்பவங்களை கொண்டு சென்றனர். அவ்வாறே இதுவும் நடக்கின்றது.
நான் வைத்தியசாலையில் இருந்து வந்த பின்னர் இது தொடர்பிலான உண்மைகளை வெளியிடுவேன் எனவும், இதற்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri