வடக்கு - கிழக்கு கடலோர பகுதிகளில் புலனாய்வு அதிகாரிகளின் தீவிர பார்வை
வடக்கு மற்றும் கிழக்கு உட்பட அனைத்து கடலோர பகுதிகளில் புலனாய்வு அதிகாரிகளின் பூரண கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு உட்பட அனைத்து கடலோர மாகாணங்களிலும் பணியாற்றும் மாவட்ட புலனாய்வு அதிகாரிகள், அந்தந்த மாகாணங்களில் உள்ள இராணுவ புலனாய்வு பிரிவுகள் மற்றும் பொலிஸ் நிலையங்கள், அந்தந்த பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கடல் எல்லையில் பறிமாற்றம்
இலங்கை கடல் எல்லைக்குள் வரும் கப்பல்களில் கைமாற்றப்படும் போதைப் பொருட்களை மீனவர்கள் கொண்டு செல்வதாக கடைக்கப்பெறும் புலனாய்வு தகவல்கள் காரணமாக, பொது பாதுகாப்பு அமைச்சு இந்த விரிவான பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், இந்த பாரிய பாதுகாப்பு திட்டத்தின் கீழ், அந்தந்த மாகாணங்களில் உள்ள பொது மக்களிடமும் பொலிஸார் உதவியை கோரியுள்ளனர்.
பல மீன்பிடி படகு உரிமையாளர்களும் இந்த போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam
சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri