புத்தரைக் கைது செய்த அநுர! பேரணிக்கு கம்மன்பிலவின் ஆட்சேர்ப்பு

Trincomalee Anura Kumara Dissanayaka Namal Rajapaksa Uthaya Gammanpila
By Rakesh Nov 20, 2025 03:01 AM GMT
Report

இலங்கையின் வரலாற்றில் புத்தர் சிலையைக் கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சாதனை படைத்துள்ளார் என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

புத்தரைக் கைது செய்வதற்குச் சமமாக இடம்பெற்ற இந்தச் சம்பவத்தால் ஒட்டுமொத்த பௌத்த சமூகமும் அதிர்ச்சியடைந்துள்ளது. எமது நுகேகொடைப் பேரணியில் இவ்வாறான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த அரசாங்கத்தின் முடிவை ஆரம்பிக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ராஜபக்சர்களின் இனவாதத்திற்கு எதிராக பொங்கியெழும் மற்றுமொரு சிங்கள இனவாத தேரர்

ராஜபக்சர்களின் இனவாதத்திற்கு எதிராக பொங்கியெழும் மற்றுமொரு சிங்கள இனவாத தேரர்

பேரணிக்கு வாழ்த்துக்கள் 

இது குறித்து ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,  

நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை இந்த அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பிப்பதைக் குறிக்கும் நுகேகொடை பேரணியில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிவிதுரு ஹெல உருமய, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி, ஜனதா சேவக கட்சி, நவ ஜனதா பெரமுன உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் பங்கேற்கவுள்ளன.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசுக்கு எதிராக நடத்தப்படும் முதல் எதிர்ப்புப் பேரணிக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்கும் பொருட்டு, மக்களுடன் இணைந்து பேரணியில் கலந்துகொள்ள இருப்பதாக எங்களுக்கு அறிவித்துள்ளனர்.

புத்தரைக் கைது செய்த அநுர! பேரணிக்கு கம்மன்பிலவின் ஆட்சேர்ப்பு | Trincomalee Buddha Statue Issue

பங்கேற்காத சில கட்சிகளும் இந்தப் பேரணிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளன. அவர்கள் அனைவரின் சகோதரத்துவத்துக்கும் நாங்கள் தலைவணங்கி நன்றி தெரிவிக்கின்றோம்.

எங்களிடம் உள்ள வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு இந்தப் பேரணியை ஏற்பாடு செய்யும்போது, எங்களுக்கு இருந்த மிகப் பெரிய சவால் என்னவென்றால், இந்தப் பேரணிக்கு எப்படி விளம்பரம் கொடுப்பது என்பதுதான்.

ஏனெனில், எங்களிடம் உள்ள வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு இந்தப் பேரணிக்கு விளம்பரம் கொடுப்பது எப்படி என்ற சவால் எங்களுக்கு இருந்தது.

ஆனால், அரசாங்கத்தால், இலங்கையின் வரலாற்றில் எதிர்க்கட்சியின் பிரசாரப் பேரணி ஒன்றுக்கு கிடைத்ததிலேயே அதிகபட்ச விளம்பரத்தை, தற்போது 21ஆம் திகதி நுகேகொடை நகரில் நடைபெறும் பேரணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனக்கு அவ்வளவு பயமா..! எதிர்த்தரப்பை கேலி செய்த அர்ச்சுனா

எனக்கு அவ்வளவு பயமா..! எதிர்த்தரப்பை கேலி செய்த அர்ச்சுனா

அநுரவின் சாதனை 

ஜனாதிபதி வரவு - செலவுத் திட்ட உரையின் போதும், கார்த்திகை வீரர்கள் தின உரையின்போதும், ஏன் நாடாளுமன்றத்துக்கு ஓடிச்சென்று திருகோணமலையில் புத்தர் சிலை பற்றி பேசியபோதும் நுகேகொடை பேரணியை நினைவுபடுத்துவதற்கு மறக்கவில்லை.

அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தினமும் நினைவுபடுத்தி இந்தப் பேரணியை வெற்றிபெறச் செய்ய, எதிர்க்கட்சியின் சகோதரக் கட்சிகளைப் போலவே, அரசாங்கத்தின் பக்கத்திலிருந்தும் எங்களுக்கு வழங்கிய அந்த ஆதரவை நாங்கள் மிகுந்த நன்றியுடன் நினைவுகூருகின்றோம்.

புத்தரைக் கைது செய்த அநுர! பேரணிக்கு கம்மன்பிலவின் ஆட்சேர்ப்பு | Trincomalee Buddha Statue Issue

பேரணி நடைபெறுவதற்கு முன்பே, அது இலங்கை வரலாற்றின் மிக வெற்றிகரமான பேரணியாக மாறிவிட்டது. ஏனெனில், இவ்வளவு பெரியதொரு அரசாங்கத்தைப் பயமுறுத்திய வேறு எந்தவொரு பேரணியும் இலங்கையின் வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை.

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம், நவம்பர் 21ஆம் திகதி பேரணியை வெற்றிபெறச் செய்வதற்காக நாங்கள் செய்த ஒரு தந்திரம் என்று ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் பல முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர். அவ்வாறெனில் பிக்குகளைத் தாக்கி, புத்தர் சிலையை அகற்றுவதற்குப் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியது நாங்களா? உண்மையில், இலங்கை வரலாற்றில் புத்தர் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சாதனை படைத்துள்ளார்.

புத்தரைக் கைது செய்வதற்கு சமமான, ஒட்டுமொத்த பௌத்த சமூகமும் அதிர்ச்சியடைந்த ஒரு சம்பவமாக இந்தத் திருகோணமலை விவகாரம் பதிவாகியுள்ளது. நாட்டை ஆட்சி செய்த ஏகாதிபத்தியவாதிகள்கூட பௌத்த மதத்தை இவ்வளவு அவமானப்படுத்தவில்லை  என்பதை நாங்கள் மிகவும் வேதனையுடன் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

நுகேகொடை பேரணியை எண்ணி அரசாங்கம் அச்சமடைந்துள்ளது. பெரும் மழை பெய்தாலும், காற்று வீசினாலும், அரசாங்கம் ஊரடங்குச் சட்டம் விதித்தாலும், அரசாங்கம் இந்தப் பேரணியைத் தடை செய்தாலும், நவம்பர் 21ஆம் திகதி மாலை நுகேகொடை நகரில் இந்தப் பேரணி நிச்சயம் நடைபெறும்  என குறிப்பிட்டுள்ளார். 

நாமலின் சட்டப் பட்டம் : புகழ்பெற்ற கல்வி வலைத்தளத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்

நாமலின் சட்டப் பட்டம் : புகழ்பெற்ற கல்வி வலைத்தளத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்

லண்டன் விவகாரத்தில் வசமாக சிக்கிய நாமல்! கதிகலங்கும் மகிந்த குடும்பம்

லண்டன் விவகாரத்தில் வசமாக சிக்கிய நாமல்! கதிகலங்கும் மகிந்த குடும்பம்

கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

புளியந்தீவு, Toronto, Canada, புங்குடுதீவு, மட்டக்களப்பு

25 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US