திருகோணமலையில் தாயும் மகளும் எடுத்த விபரீத முடிவு
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று பகுதியில் தற்கொலைக்கு முயற்சித்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (03.12.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த கே.கவிதா (வயது 47) என தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வெளியான காரணம்
உறவினர் ஒருவருக்கு 20 பவுண் நகை வழங்கியமை தொடர்பில் தாய்க்கும், மகளுக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக இருவரும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இருவரையும் சனிக்கிழமை (02.12.2023) இரவு 11.00 மணியளவில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், தாய் சிகிச்சை பலனின்றி (03) அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புலம்பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரில் பெரும் சதி! சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஆதங்கம் (Photos)
குறித்த தாய் சிகிச்சையளிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்காத நிலையில், உயிரிழந்துள்ளதாகவும், மகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam