திருகோணமலையில் கீழே தவறி விழுந்து இளைஞரொருவர் மரணம்
திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னியா, கிளிகுஞ்சுமலைப் பகுதியில் இளைஞரொருவர் கீழே விழுந்து மரணித்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
கன்னியா, கிளிக்குஞ்சுமலை பகுதியில் உள்ள கட்டிட பொருட்கள் விநியோகிக்கும் இடத்தில் மூவர் வேலை செய்து கொண்டிருந்த போது சக நண்பரொருவர் தள்ளிவிட்டதில் கீழே விழுந்து இளைஞரொருவர் இன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை-கன்னியா புதுக்குடியிருப்பு,வரோதய நகர் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் அருண்குமார் (21 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மூவர் கட்டிட பொருட்கள் விநியோகிக்கும் இடத்தில் வேலை செய்து கொண்டிருந்த வேளை இருவருக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் மற்றொருவரை தள்ளிவிட்ட போது விழுந்துள்ளதாகவும் இதனையடுத்து இவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததாகவும் தெரியவருகின்றது.
இதன்போது உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,சந்தேகத்தின் பேரில் அவருடன் வேலை செய்து கொண்டிருந்த 17 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
