திருகோணமலை எரிபொருள் கூட்டு நிறுவனத்துக்கு- இந்திய- இலங்கை பணிப்பாளர்கள்!
திருகோணமலை எரிபொருள் தாங்கி கூட்டு நிறுவனத்துக்கு- இந்திய- இலங்கை பணிப்பாளர்கள்! திருகோணமலை எரிபொருள் தாங்கிகள் தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உருவாக்கப்பட்டுள்ள, ட்ரின்கோ பெற்றோலியம் டேமினல் பிரைவெட் லிமிட்டெட் நிறுவனத்துக்கு பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இதன்படி 61 எரிபொருள் தாங்கிகளையும் நிர்வகிக்கும் கூட்டு நிறுவனத்துக்கு சுமித் விஜேசிங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சார்பில் பேராசிரியர் பிரபாத் சமரசிங்க, புஹூபதி கஹதுடுவ மற்றும் தம்மிக்க மல்லிகாராச்சி ஆகியோர் பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் சார்பில், மனோஜ் குப்தா, அஸீம் பார்ஹவா மற்றும் ராஜேஸ் பாகட் ஆகியோர் பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த பணிப்பாளர் சபையினருடன் இலங்கையின் எரிசக்தித்துறை அமைச்சர் உதய கம்மன்பில கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.


எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
