கியூ.ஆர் அட்டை முறை மூலம் எரிபொருள் விநியோகம்(video)
திருகோணமலை மாவட்டத்தில் தேசிய எரிபொருள் அனுமதி அட்டை முறை மற்றும் வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கம் என்பவற்றை கவனத்திற்கொண்டு பரீட்சாத்தமாக எரிபொருள் விநியோகிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை
திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள எரிபொருள் நிலையத்தில் கியூ.ஆர் அட்டை முறை பரீட்சிக்கப்பட்டு இன்று(24) எரிபொருள் விநியோகிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரமவின் அறிவுரைக்கமைய தேசிய எரிபொருள் அனுமதி அட்டையை பெற முடியாதவர்களுக்கு இலவசமாக தொழிநுட்ப வசதிகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் உரிய சேவைகளை வழங்கிவந்தமையும் குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் உதவி பிரதேச செயலாளரின் கண்காணிப்பில் 7 கிராமங்களுக்கு பார ஊர்திகள் கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையமூடாக எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் உதவி பிரதேச செயலாளர் ரமேஸின் கண்காணிப்பில் இன்று(24) காலை எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முறிகண்டி, வசந்தநகர், செல்வபுரம், இந்துபுரம் உள்ளிட்ட 7 கிராமங்களை சேர்ந்த மக்கள் சுமார் 1 மாத காலமாக எரிபொருள் பெற்றுக் கொள்ள முடியாது இருந்துள்ளனர்.
இதன்போது கிராம சேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கூட்டுறவு முகாமையாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் இணைந்து எரிப்பொருள் விநியோகத்தை சீரான முறையில் முன்னெடுத்துள்ளனர்.
செய்தி: யது, எரிமலை









எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam

குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில் Cineulagam
