திருகோணமலை - குச்சவெளி பிரதேச சபை ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (18) குச்சவெளி பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
குச்சவெளி பிரதேச செயலாளர் எம்.ஆர்.சியாஹூல் ஹக்கின் நெறியாழ்கையின் கீழ் இடம்பெற்ற இக்கூட்டமானது வெளிவிவகார வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திர தலைமையில் நடத்தப்பட்டது.
இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், இம்ரான் மஹ்ரூப், குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.முபாரக் உட்பட திணைக்கள தலைவர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
விசேட கூட்டம்
இதில் புல்மோட்டை பகுதியில் உள்ள பூஜா பூமி தொடர்பிலான காணிப் பிரச்சினை மற்றும் பொன்மலைக் குடா முஸ்லிம் மையவாடியின் பிரச்சினைகள் தொடர்பிலும் பேசப்பட்டது.

அத்துடன் இது தொடர்பான விசேட கூட்டமொன்று எதிர்வரும் வாரமளவில் இடம்பெறும் என இங்கு பிரதியமைச்சரால் சுட்டிக்காட்டப்பட்டதுடன் எதிர்கால அபிவிருத்தி தொடர்பிலும் வீதி திருத்தம் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பிலும் உரையாடப்பட்டது.
மேலும், மக்களின் பிரச்சினைகளும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கு பிரேரணைகளையும் முன்வைத்து உரையாற்றியுள்ளனர்.
இதன்போது, புல்மோட்டை பிரதேச கடற்றொழிலாளர்களின் பிரதான தொழிலான கட்டுவலை தொழிலுக்குரிய அனுமதியினை வழங்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan